ஏரலில் தீயணைப்பு நிலையம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 17 ஜனவரி, 2025

ஏரலில் தீயணைப்பு நிலையம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

ஏரலில் தீயணைப்பு நிலையம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் 

2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட அதிக கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றுப் படுக்கையில் அமைந்துள்ள அமைந்துள்ள ஏரல் வட்டத்தில் உட்பட்ட பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள அதிக அளவிலான வீடுகள் வணிக நிறுவனங்கள் கால்நடைகள் ஆகியவை அதிக பாதிப்பிற்குள்ளானது.

இனிவரும் காலங்களில் இப்பதில் ஏற்படும் அதிகமான வெள்ள சேதங்களை தடுப்பதற்காகவும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 2024 -25 நிதியாண்டிற்கான தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை அறிக்கை 23-ல் அறிவித்ததை தொடர்ந்து 

அரசாணை நிலை 598 (காவல் 17 )துறை நாள் 25.10.2024 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் புதியதாக ஏரல் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது அதன்படி 17.1.2025 இன்று காலை 10:30 மணியளவில் மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் திரு.பா.சரவண பாபு அவர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி தீயணைப்பு மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் மே. மனோ பிரசன்னா உதவி மாவட்ட அலுவலர் ராஜு 

தூத்துக்குடி நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமதி நட்டார் ஆனந்தி நிலைய அலுவலர் த.லிங்கதுரை இத்துறை அலுவலர் பணியாளர்கள், பிற துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் 

தமிழர் குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad