ஏரலில் குடியரசு தின கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

ஏரலில் குடியரசு தின கொடியேற்றம்.

ஏரலில் குடியரசு தின கொடியேற்றம்.

ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில்
பாரத தேசத்தின் 76 வது குடியரசு தின கொடியேற்றம்  26.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை8.00 மணியளவில் நடைபெற்றது.

நகைமதிப்பீட்டாளரும் ஏரல் வடபத்திரகாளியம்மன் கோயில் பொருளாளருமான மகாராஜன் தலைமை வகித்தார். பிஜேபி உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தார். புளியநகர் எழுச்சிப்பாடகர்
கந்தன் தேசிய பாடல்கள் பாடினார்.

தே மு தி கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் 
பூச்சிக்காடு Gசுரேஷ் மூவர்ண தேசியக்கொடி ஏற்றினார்.

அன்னாருக்கு பயனாடை அணிவித்து
 விஸ்வகர்ம ஞானவிளக்கு எனும் கவிதை நூல் வழங்கப்படடது.

யோகா ஆர்வலர் தென்கரைமகராஜன்
எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார்

விழாவில் விடுதலை போராட்ட தியாகிகள்
வல்லநாடு சுடலைமுத்து, விருதுநகர் முத்துசாமி
மதுரை மாயாண்டிபாரதி போன்றோரின் சிறப்புகளை எடுத்துரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பொற்கலைஞர் கலர்மணி, வெற்றிலை பாக்கு கடை ரமேஷ், நகைமதிப்பீட்டாளர்
சிறுத்தொண்டநல்லூர் ரமேஷ், கவிஞர் ஏரல்ராஜன், பொற்கலைஞர் மாரியப்பன்
பசி போக்கும் தளம் ஏரல் பொறுப்பாளர் கற்குவேல்ஐயப்பன்

சிறுத்தொண்டநல்லூர் அழகுமுருகன், மாணவர் சந்தனஹரிஸ், மாணவி ஹன்சிகா எனப்பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்

நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஏரல் ராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad