குடியாத்தம் ,ஜன 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் 7 அடி உயரத்தில் உள்ள புற்று அதை அப்பகுதி மக்கள் நாக தேவதை என்று நினைத்து புற்றுக்கு பால் முட்டை மஞ்சள் குங்குமம் பூவால் அலங்கரிக் கப்பட்டு தெய்வமாக வழிபட்டு வரும் பொது மக்களை அந்த இடத்தை அத்துமீறி அபகரிக்கும் தனிநபர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பகுதி மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செல்வ பெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் கோட் அடுத்த புதிய மேம்பாலம் கட்டுமான பணிநடந்திருக்கும் இடத்திற்கு அருகே 7,அடி உயரம் புற்று அமைந்துள்ளது .
இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொது மக்கள் கோயிலாக அமைந்துள்ளது இந்த கோயிலில் தினந்தோறும் அப்பகுதி பொதுமக்கள் புற்றுக்கு பால்ஊற்றி பூஜையிட்டு வழிபட்டு நடத்தி வருகிறார்கள் இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த எம். செல்வம் அவர்களின் மனைவி எஸ் .வசந்தி அத்துமீறி முள்வேலி அமைத்து பக்தர்கள் பொதுமக்கள் யாரும் உள்ளே வராதபடி முள்வேலி அமைத்து மூடிவிட்டனர் இதை பொதுமக்கள் கேட்டதற்கு இங்கு யாரும் உள்ளே வரக்கூடாது இந்த இடம் அனைத்தும் எனக்கு சொந்தம் இடம் என்று கூறி பொதுமக்களை மிரட்டி வருகிறார்கள் இது குறித்து அப்பகுதி மக்கள் இன்று குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா அவர்களிடம் மனுவாக எழுதி கொடுத்துள்ளார்கள் மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் அவர்கள் மனுவை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக