அப்போது அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு பேரை அனைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது சிறிது நேரம் கழித்து காவல் ஆய்வாளரின் வாகனமும் வந்து நின்றது அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசனை கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர போலீசார் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சந்துரு மற்றும் கோகுல் ஆகிய இருவரையும் சென்னையில் இருந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அழைத்து வந்தனர் மேலும் அரசு ஊழியரை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக