தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.

IMG-20240603-WA0039

 தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.


தேசிய நெடுஞ்சாலை   ஆணையத்தின் கட்டுப்பாடுகளின் கீழ் தமிழகத்தில் உள்ள 29   சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்தில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


மார்ச் மாதமே உயர்த்தப்படவிருந்த கட்டண உயர்வு நடைமுறை நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளி வைத்த நிலையில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது இதன் படி 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வாகனம் மற்றும் தூரம் ஆகியவற்றிற்கு ஏற்ப்ப உயர்த்தப்பட்டுள்ளது.


சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி வாடகைகள்  உயரும்  இந்த உயர்வு அத்தியாவசிய பொருட்கள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad