மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து விதமான விளையாட்டுகளையும் உலகத் தரத்தில் கொண்டு செல்வதற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சார்பில் பெண்களுக்கான கேலோ இந்தியா கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்விகள் துறை மற்றும் விளையாட்டு யுனிவர்சிட்டியில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சென்சாய் .வி. ரங்கநாதன், செயலாளர் பி.சத்யராஜ் இவர்கள் தலைமையில் மாணவிகள் பங்கு பெற்றனர். இப் போட்டிகள் லைட் கான்டக்ட் , கிக் லைக் லோகிக், பாயின் பைட் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் லைட் காண்டக்ட்மற்றும் லோகிக் பிரிவில் எஸ்.சுபாஷினி,கே. கார்த்திகா, வி.ரிஷிகா, கே. சண்முகப்பிரியா, எம்.எஸ்.ஆதார சகானா, கே.மகாலட்சுமி, ஜே.அக்ஷ்யா ஆகியோர் முதல் பரிசுகளும் கே. தர்மெஸ்டா, எஸ்.கண்மணி ,ஆர். நந்தினி, இ.மதுலிகா, எஸ். ரேணுகாதேவி, ஆகியோர் இரண்டாம் பரிசும் எ.சுசிகா, கே. ஸ்ரீமதி ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
ஆர்.ரவிக்குமார், பிருத்தியுனன், ராஜ்கிரண், மகாலட்சுமி ஆகியோர் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கத் தலைவர் திரு சுரேஷ்பாபு துணைத் தலைவர் சதீஷ் கண்ணன் சென்சாய் .வி.ரங்கநாதன், கராத்தே பயிற்சியாளர் இளவரசன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக