சுற்று சூழலை பாதுகாக்க மர கன்றுகள் நடும் போதகர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

சுற்று சூழலை பாதுகாக்க மர கன்றுகள் நடும் போதகர்.

தூத்துக்குடி மாவட்டம், CSI தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், சுற்று சூழல் கரிசனை துறை சார்பில் புவி வெப்பமயமாதலை தடுக்கவும், இயற்கையை பாதுகாக்கவும், வறட்சியை குறைக்கவும், காற்று மாசு படுதலை தடுக்கவும், பருவ மாற்றம் போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சுற்று சூழல் கரிசனை துறை இயக்குனரும் போதகருமான அருட்திரு ஜான் சாமுவேல் அய்யர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.



அதன் ஒரு பகுதியாக மர கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி பல்வேறு இடங்களில் சபை மக்கள், பொது மக்கள் ஆதரவுடன் செயல் படுத்தி வருகிறார். இயற்கையை பாதுகாக்க பல இடங்களில், குறிப்பாக நீர் நிலைகள் உள்ள இடங்களில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. தற்போதய காலங்களில் மாணவர்கள் கைகளில் செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்து கொண்டே உள்ளன. 


அப்படி உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து இயற்கை மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் பனை ஓலைகளில் ஆர்ட் தொழில், பனை மரங்கள் அவசியம், அதன் பலன்கள் என்ன போன்ற விசயங்களை மாணவர்களுக்கு செயல் விளக்கம் கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்று சூழலை பாதுகாக்க சைக்கிள் பேரணி நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


மேலும் இன்று நவ.16, காலை நாசரேத் கைத்தொழில் பாட சாலை, மர்காஷியஸ் மேல்நிலை பள்ளி வளாகங்களில் மர கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களை இயற்கையை பாதுகாக்க ஊக்கப் படுத்தினார். வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஊர்களில் பொது இடங்களில் மரக்கன்று நடுவதற்கு ஆயத்தமாக உள்ளார். இலுப்பை, நீர்மருது. சிகப்பு கொன்றை, வாதுமை, பலா, ஆவி போன்ற மரங்கள் அவரிடம் உள்ளன.


மர கன்றுகள் தேவைப்படுவோர் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குநரை 9488400874 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். என்ற தகவலை ஊடகங்கள் வழியே தெரிவித்து வருகிறார். நாமும் அதை கடை பிடித்து இயற்கையை பாதுகாக்க முற்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/