கால்பந்து போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 24 அக்டோபர், 2023

கால்பந்து போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு.

.com/img/a/

மதுரை மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பாக, கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு பிரிவினருக்கான கால்பந்து போட்டிகள் வெகு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.   12  வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி, டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


இந்த போட்டியில், மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டு, தொடர் போட்டியாக மொத்தம் 91 போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மதுரை டான் போஸ்கோ புதூர் அணி முதலிடத்தையும், ஜெயபால் ஸ்போர்ட்ஸ் சென்டர் அணி இரண்டாவது இடத்தையும், உசிலை கால்பந்து கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையும், நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் மதுரை மாவட்ட கால்பந்து கழக தலைவர்  நிப்பான் தனுஷ்கோடி  வழங்கினார்கள்.  அது சமயம், செயலாளர் சீனி மொகைதீன், உதவி தலைவர்கள்  வரதராஜன்,  டாக்டர்.வி.ஆர் நியூபிகின் செல்லப்பா, ஜான் பென்னி விக்டர், மற்றும் பாலாஜி, சுந்தரராஜா, செல்லாராஜ்,  ராஜேந்திரன் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவினை  சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad