மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் அவர்களின் தலைமையிலும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திரு ரெகுநாதத்துரை அவர்கள் கலந்து கொண்டு எமிஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.


EMIS பதிவுகள் குறித்த சிறப்பும் சீரமைப்பும் தொடர்பான SMC கூட்டம் update செய்தல் வேண்டும் என்றும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவு செய்தல் வேண்டும் என்றும் எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டுப் பணியில் தொய்வுகளைச் சரிசெய்தல் வேண்டும் என்றும் மாவட்ட அளவில் முன்னுதாரணமாக அன்றாடப் பணிகளில் ஆசிரியர்கள் உடனுக்குடன் பதிவுகள் மேற்கொள்ள வேண்டுதல்.


OOSC மாணவர்களை கண்டறிந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும், பணிச்சிறப்பு என்பதை விட தொய்வில்லாப் பணிச்சிறப்பு மேன்மையாம் என்றும் கூறப்பட்டது.


வீரக்கதா சார்ந்த பொருளுரை இலவசப் பேருந்து பயண அட்டை பெற்று வழங்கல், உள்ளூர் விடுமுறை சார்ந்த கருத்துரை பள்ளிப்பார்வை சார்ந்த பதிவேடுகள் குறித்தும் Autism awareness குறித்த தெளிவுரை வழங்கப்பட்டது.


மாற்றுப்பணி ஆசிரியர்களை அனுப்புதல், மாணவர்கள் குறிப்பேடுகளைச் சரிவர திருத்தி உரியவாறு மதிப்பீடு செய்தல் வேண்டும் என்றும் பள்ளிச் செல்லாக் குழந்தைகள் கண்டறியும் களப்பணி மேற்கொண்டு மீளவும் பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளி அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. எமிஸ் தொடர்பான பணிகளை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.


இக்கூட்டத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.முத்துராமன் திரு வேல்சாமி மற்றும் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்னண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/