கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் விதைச்சான்று துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் விதமாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் சாத்தமங்கலம் கிராமத்தில் 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு இன்று தமிழக முதலமைச்சரால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கீரப்பாளையம் ஒன்றியப்பெருந்தலைவர் திருமதி. கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழு தலைவர் திரு .சபாநாயகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி. மனோரஞ்சிதம், ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.கல்பனா திருமுகம், வேளாண்மை உதவி இயக்குனர் திரு. அமிர்தராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமதி .சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு .இப்ராகிம், வேளாண்மை அலுவலர் திரு. சிவப்பிரியன், துணை வேளாண்மை அலுவலர் ராயப்பநாதன், ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் புகழேந்தி, ராஜபாபு, வெங்கடேசன், வேல்முருகன், சிவக்குமார், திவாகர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டாரத்தொழில்நுட்ப மேலாளர் திருமதி. ஆனந்த செல்வி மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சரவணன், அபிநயா, பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள் திரு. வீராசாமி, திரு .பிரேம், திரு .சிவசரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக