வாழை-மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

வாழை-மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ள அறிவிக்கை பெறப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 4930 எக்டேர் பரப்பளவில் வாழை மற்றும் 1250 எக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 


வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய வற்றால் இழப்பு ஏற்படும்போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன்பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. 


குத்தகை விவசாயிகளும், இத்திட்டத் தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4203 பிரீமிய மாக செலுத்தி ரூ.84 ஆயிரத்து 50 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463 செலுத்தி ரூ.29,250 இழப்பீடாகவும் பெறலாம்.கடன்பெறும் விவசாயி களுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். 


கடன் பெறாத விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். இதற்கு நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை தேவையான ஆவணங்களாகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 29ந்தேதி கடைசி நாளாகும். 


மேலும், இது தொடர் பான விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறு மாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/