இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் வி4 காவல் நிலையம் இயங்கி வருகிறது இந்த காவல் நிலையத்தில் கலவை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்க்க மனுக்களை கொடுத்தனர் அதன்படி காவல் துறையினர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதோடு பொது பிரச்சினைகளுக்கு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.
பலருக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கு பாதுகாப்பில்லாமல் மழைநீரில் உறைந்து போய் பாதிப்படைந்த கட்டிடத்தில் பல்வேறு கோப்புகளை பாதுகாப்பதோடு பணியையும் பயத்தோடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட டி எஸ் பி பிரபு காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள், வழக்குகள், பதிவேடுகள், காவல் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆய்வாளர்கள் சரவணமூர்த்தி, உஷா, சூரியா, சங்கர், காவலர் சரிதா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக