மாற்றுத்திறனாளி குரலை கேட்டு திடீரென காரிலிருந்து இறங்கி சென்ற மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

மாற்றுத்திறனாளி குரலை கேட்டு திடீரென காரிலிருந்து இறங்கி சென்ற மாவட்ட ஆட்சியர்.

.com/img/a/

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் திருக்கோவிலூர் வட்டம் ஜி.அரியூர் கிராமத்தில், ஆய்வை முடித்துக்கொண்டு வரும் வழியில் மாற்றுத்திறனாளி ஒருவர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கூப்பிட்ட பொழுது திடீரென காரிலிருந்து இறங்கி சென்ற மாவட்ட ஆட்சியர்.
  

மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளியிடம் நேரடியாக கோரிக்கையை கேட்டறிந்து, மாற்றுத்திறனாளியின் கோரிக்கையான 3 சக்கரம் வண்டி உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார் . 


அதனைத் தொடர்ந்து இன்று மாற்றுத்திறனாளி சலவைத்தொழிலாளி ராமதாஸ்க்கு 83,500 மதிப்புள்ள இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் வழங்கினார். மேலும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை 17000 வீதம் 34000க்கான காசோலைகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad