வால்பாறையை சேர்ந்த சிறுமி 15 வயது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று இருந்தனர் சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது கண்ணன் சிறுமியின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்துள்ளார் ஆசை வார்த்தைகள் கூறி பின்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், கடந்த சில நாட்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார், இந்நிலையில் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாக சிறுமியின் தாயிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார், இதற்கு யார் காரணம் என்று விசாரித்த போது சிறுமி தன்னை டிரைவர் கண்ணன் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் சேக்கல் முடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணை நடத்தினர், பின்னர் தலைமறைவாக இருந்த டிரைவர் கண்ணனை கைது செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக