திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான காலை சிற்றுண்டி வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது, இன்று காலை உணவாக வெண்பொங்கல் மற்றும் கேசரி தலைமையாசிரியர் இந்திரா அவர்கள்தற்காலிக ஆசிரியர் சரளா அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்தை அன்பளிப்பாக வழங்கினார் நல்லா சிரி இந்திரா அவர்கள் முதலமைச்சரின் படத்தை தானே வரைந்து அதில் காலை உணவு சிற்றுண்டிக்கு தேவையான தானியங்களை வைத்து படம் வரைந்து போட்டோவாக பள்ளிக்கு பரிசளித்தார் மாணவர்கள் இந்த காலை முதலமைச்சரின் படத்தை படத்தை பரிசாக வழங்கினார்.
இந்த விழாவில் மாணவர்கள் காலை சிற்றுண்டியை வைத்து முதலமைச்சர் அவர்களை பாராட்டி ஒரு சிற்றுண்டியில் அழகான ஒரு பாடலை மெட்டு அமைத்து பாடினர், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக சேர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டியை வழங்கினார்கள்.
தலைமையாசிரியர் நல்லவர் ஸ்ரீ இந்திரா, இந்த திட்டத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார், உதவி ஆசிரியர் தனம்மாள், தற்காலிக ஆசிரியர் சரளா, சத்துணவு ஊழியர்களும் காலை சிற்றுண்டி ஊழியர்களும், அருள்மொழி, சுகுணா, பிரியா ஆகியோரும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டுபள்ளி முழுவதும் விழாக்கோலம் போல காட்சியளித்தது மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும்மகிழ்ச்சி அடைந்தார்கள் இறுதியில் இனிப்புகள் வழங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக