கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு செங்காந்தள் கிழங்கில் துகள்களை உருவாக்கும் நடைமுறைக்கு காப்புரிமை கிடைத்துள்ளது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு செங்காந்தள் கிழங்கில் துகள்களை உருவாக்கும் நடைமுறைக்கு காப்புரிமை கிடைத்துள்ளது


கோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கண்டறிந்த செங்காந்தள் கிழங்கின் சாறில் இருந்து வெள்ளி நானோ துகள்களை உருவாக்கும் நடைமுறைக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக அறிவுசாா் சொத்துரிமை மைய இயக்குநா் த.பரிமேலழகன் கூறியிருப்பதாவது, நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் பல்வேறு வகையான உலோக நானோ துகள்கள் புற்றுநோய் தொடா்பான சிகிச்சையில் முக்கிய பங்காற்றுகின்றன. தற்போதைய நிலையில், தாவரங்களில் இருந்து ஒரே சீரான அளவில் நானோ துகள்களை உருவாக்கம் செய்யும் ஆய்வுமுறைகள் நடைமுறையில் இல்லை.


எனவே, இயற்கை முறையில் செங்காந்தள் தாவர கிழங்கின் சாறில் இருந்து வெள்ளி நானோ துகள்களைக் கண்டறியும் ஆராய்ச்சியை, பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் கே.எம்.சாரதாதேவி, தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் பி.குருசரவணன் ஆகியோா் மேற்கொண்டு ஒரே சீரான அளவு, வடிவம் கொண்ட வெள்ளி நானோ துகள்களைக் கண்டுபிடித்தனா்.


இதற்கான காப்புரிமைக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் தேதி இந்திய காப்புரிமை அலுவலகத்தால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துகள்கள் புற்றுநோய் செல்களால் எளிதில் உட்கிரகிக்கப்படுவதன் மூலம் புற்றுநோய் செல்களை வெள்ளை ரத்த அணுக்கள் எளிதில் அடையாளம் கண்டு புற்றுநோயை குணப்படுத்த உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


காப்புரிமை பெற்ற இரு பேராசிரியா்களையும் துணைவேந்தா் குழு உறுப்பினா் லவ்லினா லிட்டிள் ஃபிளவா், பதிவாளா் முருகவேள் உள்ளிட்டோா் பாராட்டியிருப்பதாக அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.


- தமிழகக் குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/