ஜெயிலர் பட தியேட்டர் மீது கல்வீச்சு கண்ணாடி உடைப்பு பரபரப்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

ஜெயிலர் பட தியேட்டர் மீது கல்வீச்சு கண்ணாடி உடைப்பு பரபரப்பு!


நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி தமிழக முழுவதும் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் திருப்பூரிலும் பல தியேட்டர்களில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் அவினாசி ரோட்டில் அம்மாபாளையத்தில் உள்ள தியேட்டரில் திருப்பூரை அடுத்த அவிநாசியை சேர்ந்த தன்வீர் வயது 24 மற்றும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் ஆன லோகநாதன் வயது19 ஆகிய இரண்டு பேரும் இரவு 10 மணி காட்சிக்கு ஜெய்லர் படம் பார்க்க சென்ற நிலையில் அப்போது இருவரும் குடிபோதையில் தியேட்டர் காவலாளி சிவனேசனை தகாத வார்த்தையால் பேசி தகராறு ஈடுபட்டுள்ளனர். 


மேலும் சிவநேசனை தாக்கியதாகவும் தெரிகிறது இதுகுறித்து தகவல் அறிந்த திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தன்வீர், லோகநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற தன்வீர், லோகநாதன் ஆகியோர் சிறிது நேரத்தில் மீண்டும் தியேட்டருக்கு வந்து காவலாளி சிவனேசன் மீது உள்ள ஆத்திரத்தில் தியேட்டர் மீது கல்லை எடுத்து வீசியுள்ளனர்.


ஆனால் அந்த கல் தியேட்டரை அடுத்து இருந்த பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தின் மீது விழுந்தது ஏடிஎம் மைய முன்புறம் கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதம் அடைந்தது. இதை அடுத்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தன்வீர், லோகநாதன் பிடித்து பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். 



இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தியேட்டர் மேலாளர் வருண் மற்றும் வங்கி கிளை மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தன்வீர் மற்றும் லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயிலர் படம் வெளியிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு நடந்தது திருப்பூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/