திருப்பூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 10 தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 


பாரதம பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடன் பெறலாம் அதை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும். இரண்டாவது கடன் 20 ஆயிரம் பெறலாம் அதை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தினால், மூன்றாவது கடனாக 50ஆயிரம் பெறலாம் அதை வங்கிகள் மூலம் வழங்கப்படும் வங்கிகள் நிர்ணயம் செய்துள்ள காலத்துக்குள் திரும்ப செலுத்த வேண்டும். 


தகுதியானவர்கள் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை பெற்று திருப்பூர் அவிநாசி ரோடு பங்களா ஸ்டாப் மற்றும் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவி குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், 99 44 05 40 60 என்ற செல்போன் எண்ணிலும் தகவல் பெறலாம், இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.  


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/