திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டி இம்பரஸ் லயன்ஸ் சங்கத்தின் மாபெரும் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டி இம்பரஸ் லயன்ஸ் சங்கத்தின் மாபெரும் ரத்ததானம் முகாம் நடைபெற்றது.

AVvXsEgqKOxBGr-3pGp5ySwxoJumw1Ju-split

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொப்பம்பட்டி இம்ப்ரெஸ் லையன்ஸ் சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் ரத்த சேமிப்பு வங்கி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் கொப்பம்பட்டி இம்ப்ரஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவரும் நாகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருமான பி.முருகன் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்விற்கு துணைத்தலைவர் எம்.கார்த்திக், செயலாளர் மணிகண்டன், பொருளாளர், எம்.கார்த்திக், சங்க சாசன தலைவர் பி.மணி, நல்லாசிரியர் அசோக்குமார் கருணாகரன், இயக்குனர் ராஜேந்திரன், சுரேஷ், முன்னாள் தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மருத்துவர் சந்திரமோகன் தலைமையிலான மருத்துவக் குழு களப்பணியில் இருந்தனர்.

AVvXsEgqKOxBGr-3pGp5ySwxoJumw1Ju-split%20(1)

நிகழ்விற்க்கு தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள், லயன் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் முகாமிற்கு வருகை புரிந்த மருத்துவக் குழு,ரத்த வங்கி மற்றும் சங்க நிர்வாகிகள் ரத்ததானம் செய்த நல் உள்ளங்கள் ஆகியோருக்கு இம்ப்ரஸ் லயன் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார் தலைவர் பி. முருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad