ஒட்டப்பட்டி கிராமத்தில் பல்நோக்கு கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து பணியை எம் பி செல்லகுமார் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வட்டப்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.ஆறு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஆறுமுகம்.மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் குமார்,வட்டாரத் தலைவர்கள் திருமால்,தனஞ்செயன்,மின்டிகிரி ரவி.மாவட்டத் துணைத் தலைவர்கள் விவேகானந்தன், சாந்தசீலன்,ராமன்,சேகர்,நார்ல பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சரோஜா வெள்ளிங்கிரி, துணைத் தலைவர் தேவி புகழேந்தி,ஒன்றிய குழு உறுப்பினர் முருகன்,மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ்சத்தியநாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக