ஒற்றுமைக்கான நடைபயணத்தில் முலாயம் சிங்கிற்கு மெளன அஞ்சலி! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 11 அக்டோபர், 2022

ஒற்றுமைக்கான நடைபயணத்தில் முலாயம் சிங்கிற்கு மெளன அஞ்சலி!


உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மெளன அஞ்சலி செலுத்தினார்.

உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள முலாயம் சிங்கின் சொந்த ஊரில் இன்று முழு அரசு மரியாதைக்கு பின், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

ஒற்றுமைக்கான நடைபயணத்தில் இருப்பதால் ராகுல் காந்தியால் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து அசோக் கெலாட், பூபேஷ் பாகல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒற்றுமைக்கான நடைபயணத்தின் போது முலாயம் சிங்கிற்கு ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபல் உள்பட தொண்டர்கள் அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad