வக்ப் திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம்! பள்ளிவாசல் , கபர்ஸ்தான் விட்டுத்தரமாட்டோம்..
எஸ்டிபிஐ கட்சியின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!
மேலப்பாளையம் ஏப்ரல் 2, எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி தலைமையில்
வக்பு திருத்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது!
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல!
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாவட்ட பொதுச் அமைப்பு செயலாளர் அன்வர்ஷா வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை தலைவர் சாகுல் உஸ்மானி துவக்க உரை ஆற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அஹமது, விவசாய அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா கண்டன உரை ஆற்றினார்கள்.
மாவட்ட, தொகுதி, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் l. விவசாய அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா தனது கண்டன உரையில் வக்ஃப் மசோதாவை ஏற்கமாட்டோம்,
வக்ஃப் என்பது முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை, வக்ஃப் உரிமைப் பறிப்பை அனுமதியோம்! வக்ஃப் என்பது முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை என்று சுட்டிக் காட்டினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சனா சிந்தா, தொகுதி நிர்வாகிகள் சேக் இஸ்மாயில், சேக் முகம்மது பயாஸ், வழக்கறிஞர் முபாரக் அலி, சிட்டி சேக்,சலீம் தீன்,கே.கே.காஜா, ஜவுளி காதர் கலந்து கொண்டனர். இறுதியாக பாளை தொகுதி முன்னாள் தலைவர் மின்னத்துல்லா நன்றி உரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக