குடியாத்தம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண்தூக்கிட்டு தற்கொலை
போலீசார் விசாரணை!
குடியாத்தம் ,ஏப் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் முட்டுகூர் கிராமம் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த .அம்மு க/பெ.சுரேஷ் (வயது 37) என்பவர் 3.4.2025இரவு 12:00 மணியளவில் குடும்ப தகராறு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்து விட்டார் என தெரிய வருகிறது இறந்த அம்மு என்பவர் திருமணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிறது மேலும் இவருக்கு (வயது13 )(வயது 11) வயதுள்ள இரண்டு ஆண்கள் பிள்ளைகள் இருப்பதாக விசாரணையில் தெரிய வருகிறது
இது சம்பந்தமாக கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக