நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து வடக்கன்குளம் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் வேலன் ஸ்கேன் சென்டர் அருகில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தடை இருப்பதற்கான எந்தவித அடையாளமும் இல்லாததால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் வெளியூர் வாகனங்கள் விபத்துகளில் சிக்கி வருகிறது.
இதே போல் பெத்தரங்கபுரம், வடக்கன்குளம் நேரு துவக்கப்பள்ளி முன்பு ஆகிய இடங்களில் வேகத்தடைகள் மீது வர்ணம் பூசாததால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது,
ஆகவே வேகத்தடைகள் அமைக்கப்படும்போது அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைதுறையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் வேகத்தடைகள் மீது முறையாக வர்ணம் பூசி எச்சரிக்கை பலகை பொருத்த வேண்டும் என நம்மால் முடியும் குழு தலைவர் ராதை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக