கன்னியாகுமரி மாவட்டம், சக்தி கேஸ் ஏஜென்சி மற்றும் சண்முகா நகர் நல சங்கம் இணைந்து நடத்திய எரிபொருள் பாது காப்பு மற்றும் ஆரோக்கிய வாழ்வு குறித்து கருத்தரங்கம் தேரேகால்புதூர் சண்முகா நகரில் வைத்து நடந்தது. இதில்.ரவீந்திரன் (சக்தி கேஸ் ஏஜெண்சி) , டாக்டர் சுனில் சுப்ரமனியம் , டாக்டர் சிவகாமி , கதிரேசன் (உதவி பொறியாளர் தமிழ் நாடு மின்சார வாரியம்) கலந்து கொண்டார்கள்.
ஏரி வாயு எப்படி பாதுகாப்பாகவும் , சிக்கனமாகவும் உபயோக வேண்டும் என்று. ரவீந்திரன் உரையாற்றினார்கள். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் பாதுகாப்பாக உபயோகிப்பதை பற்றி.கதிரேசன் அவர்கள் எடுத்து கூறினார்கள்.
உடல் ஆரோக்கியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் டாக்டர் சுனில் சுப்ரமணியன் மற்றும் டாக்டர் சிவகாமி நல்ல கருத்துக்களை பரிமாறினார்கள். சண்முகம் மற்றும் சின்னையா பிள்ளை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக