நெமிலியில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று
திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
ராணிப்பேட்டை , ஏப் 08 -
நெமிலியில் ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்த ஆளுநர் மீது வழக்குதொடுத்து உச்சநீதிமன்றத்தில் வெற்றி கண்டு இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை கொண்டாடும் விதமாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் ஆணைக்கினங்க, மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி வழிக்காட்டுதலின்படி, நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நெமிலி அண்ணா சிலை அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், கழக நிர்வாகிகள். மேலேரி மனோகரன், குமார், பார்த்திபன் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக