பணி நிறைவு பெற்ற பேர்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

பணி நிறைவு பெற்ற பேர்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா.

பணி நிறைவு பெற்ற பேர்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா.
  பேர்ணாம்பட்டு ,03 -

  வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டாரத்தில் மூன்று ஆண்டுகளாக வட்டாரக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த .கோ.சம்பத்குமார் 31.03.2025 பணி நிறைவு பெற்றார். பேர்ணாம்பட்டு வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அடைய சிறப்பாக பணியாற்றியவர்.பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த மாணவர்கள் கல்வித் திருவிழா மற்றும் கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்ட 31.03.2025 அன்று பணி நிறைவு பெற உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் கோ.சம்பத்குமார் அவர்களின் சிறந்த கல்வி சேவையை பாராட்டி பள்ளி மேலாண்மைக் குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி.  அலுவலர் வடிவேல், தலைமை ஆசிரியர் பொன் வள்ளுவன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பணி நிறைவு பெறும் வட்டாரக் கல்வி அலுவலருக்கு பாராட்டு தெரிவித்தனர். பள்ளி முன்னாள் மாணவர்களும் கலந்துக் கொண்டனர்
இந்நிகழ்வில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் அவர்களுக்கு உதவும் இதயங்கள் சங்கத்தின் சார்பாக அதன் அங்கத்தினர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் பொன் னாடை ,சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad