மஹாவீர ஜெயந்தியை முன்னிட்டு வேலூரில் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலம் பல்லக்கில் மஹாவீரர் சிலை வைத்து வழிபாடு ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

மஹாவீர ஜெயந்தியை முன்னிட்டு வேலூரில் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலம் பல்லக்கில் மஹாவீரர் சிலை வைத்து வழிபாடு !

மஹாவீர ஜெயந்தியை முன்னிட்டு வேலூரில் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலம் பல்லக்கில் மஹாவீரர் சிலை வைத்து வழிபாடு !
 

வேலூர், ஏப் 10 -

வேலூர் மாவட்டம்,வேலூர் பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள சம்பவ்ந்தாத ஜெயின் ஆலயத்திலிருந்து இன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள் பின்னர் குதிரைகளுடன் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திரு உருவ படம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து குதிரைகள் முன்னர் செல்ல மேளதாளங்ககுடன் நடனமாடிய படி ஜெயின் சமுதாய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பாடல்களை பாடிய படி    ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக வேலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்ல கூடாது மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இந்த ஊர்வலமானது காந்திரோடு,பி.எஸ்.எ.ஸ்கோவில் தெரு வழியாக மீண்டும் ஜெயின் ஆலயத்தில்  நிறைவடைந்தது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad