தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவி யாளர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவி யாளர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்!

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்! 

திருப்பத்தூர் , ஏப் 09 -

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணை அடிப்படையில் வருவாய் துறையில் கிராம உதவியாளர்களுக்கு பணி நியமனம் செய்தார் ஆனால் அவரது பிள்ளை முதல்வர் ஸ்டாலின் அச்சலுகைகளை நிறுத்திவிட்டார்
 மனு அளித்தாலும் சரியான பதில் அளிக்காமல் மலுப்புகிறார் எனவும்   தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக மூன்று கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மாவட்டத் தலைவர் ராஜாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்உள்ளே நடைபெற்றது மேலும் மூன்று அம்ச கோரிக்கையான சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33 உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் கணினி அம்மணம் வழங்க கோரும் கோப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் நிறுவியாக உள்ளது விரிவாக ஒப்புதல் வழங்க கோரியும் 17.12. 24 அன்று சென்னையில் எழிலகத்தில் நடைபெற்ற 72 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான்கு மாதத்தில் தீர்வு வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக ஒத்துக் கொண்ட வருவாய் நிர்வாக ஆணையருக்கு நினைவூட்டவும் மேலும் அலுவலக உதவியாளருக்குஇணையாக வரையறுக் கப்பட்ட காலம் வரை ஊதியம் 15,800 வழங்க வேண்டும் எனக் கூறியும் 50க்கும் மேற்பட்ட வருவாய் ஊழியர்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி றார்கள் இதில் மாவட்ட பொருளாளர் எஸ் ஜெகநாதன் மாவட்ட செயலாளர் பிச்சாண்டி மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ் வட்டத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு  கோஷங்களை எழுப்பினார்கள்

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad