ஜோலார்பேட்டை, ஏப் 13 -
வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய ஸ்கார்பியோ காரில் வெளிமாநில பதுபாட்டில்கள் கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது! 2லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரி பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் நவீன் (வயது 26) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகன் மகன் ஆதித்யன் (வயது 24) ஆகிய இருவரும் கர்நாடகாவில் இருந்து மது பாட்டிலில் கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சின்னவெங்காயபள்ளி பகுதியில் ஜோலார்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய ஸ்கார் பியோ கார் பஞ்சர் ஆகி நின்று கொண்டி ருந்தது. அப்போது சந்தேகத்தின் பேரில் சென்று காரை சோதனை செய்ததில் அதில் 30 பாக்ஸ் அளவில் இரண்டு லட்சம் மதிப்பிலான கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக இருவரையும் ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர் மேலும் இவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய ஸ்கார் பியோ காரில் வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி இரண்டு வாலிபர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக