கழிப்பிடம் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு:
நீலகிரிக்கு என்று தனி சட்டங்கள் கொண்டுவரும் தமிழ்நாடு அரசுக்கு இதற்கு என்ன தீர்வு காண போகிறீர்கள் இன்னும் எப்படி எல்லாம் கொடுமை செய்வீங்க
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு வியூ பாயிண்டில் கழிப்பிட வசதி இல்லாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள். கட்டணம் மட்டும் வசூலிக்கிறீங்க ஒரு கழிப்பிட வசதி செய்து கொடுக்க முடியாதா ? என்னய்யா அநியாயம் இது என சரா மாறியாக கேள்விகள் கேட்டும் பொறுப்பில்லாமல் கழிப்பிடத்தை பூட்டி வைத்து தண்ணீர் இல்லை என்று அலட்சியமாக பதில். சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் துறை தன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக