ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பங்குனி கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பங்குனி கொடியேற்றம்.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பங்குனி கொடியேற்றம். 

ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 2.தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

இந்த ஆண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது. உற்சவர் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார்  கொடிமரம் முன்பாக மண்டபத்தில் எழுந்தருளினார். 

காலை .6.10 மணிக்கு கொடிபட்டம் சுற்றி வந்தது. 6.50 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், அர்ச்சகர்கள் கண்ணன். விவேக். கோவில் செயல் அலுவலர் சதீஷ் ஆய்வாளர் நம்பி. 

அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன் செந்தில் குமார், காளிமுத்து.ராமலட்சுமி.முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும் மாலையும் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். 6 ந் தேதி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தருகிறார் , 

10 ம் தேதி காலை 8 மணிக்கு பொலிந்து நின்றபிரான் தேரோட்டமும் நடக்கிறது. 11 ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad