கோவையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு.
கோவையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு .கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள் அவர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக