தூய்மை திட்டத்தில் வழங்கப்பட்ட குப்பைத்தொடிகள் பழைய இரும்பு கடையில் !
திருப்பத்தூர் , ஏப் 02 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தராம்பள்ளி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களால் கிராமப்புறங்களில் உள்ள குப்பைகளை குடியிருப்பு பகுதியில் இருந்து அப்புறப்படுத்த அற்புதமான திட்டத்தை சுந்தரம்பள்ளி கிராமத்திற்கு சுமார் 25 குப்பை சேகரிக்கும் தொட்டி தரப்பட்டுள்ளது ஒரு குப்பை சேகரிக்கும் தொட்டியின் விலை 8,500 ஆனால் பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பாக 24 குப்பை சேகரிக்கும் தொட்டியை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அமைந்துள்ள பழைய இரும்பு வாங்கும் கடைக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது
மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது இனியாவது பொறுப்புள்ள அதிகாரிகள் முழு விசாரணை மேற்கொண்டு விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா அல்லது அரசியல் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு திருப்பத்தூர் மாவட்ட மக்களிடம் எழுகிறது கந்திலி ஒன்றிய பாஜக செயலாளர் கே என் சுரேஷ்குமார் பேட்டியில் கூறினார்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ . அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக