ஆழ்வார்திருநகரி. ஏப்ரல் 16. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 7 வது திவ்யதேசம் தென்திருப்பேரை. ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
கடந்த 11 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் 5 ந் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 6 விஸ்வரூபம். 6.30 மணிக்கு திருமஞ்சனம். நித்தியல் கோஷ்டி. 8 மணிக்கு காலை தோளிக்கினியானில் ரதவீதிஉலா நடந்தது. 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்.
12 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்ய பிரபந்தம். சாத்துமுறை. தீர்த்தம் சடாரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7.30 மணிக்கு உற்சவர் சுவாமி நிகரில் முகில் வண்ணன். தாயார் குழைக்காதநாயகி தாயார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். சுவாமி கருட வாகனத்திலும் தாயார் அன்ன வாகனத்திலும் 11 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்து மாட வீதி. ரதவீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி. நீதிபதி மகராஜன். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏப்ரல் 19 ந்தேதி தேரோட்டம் 20 ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக