பூண்டிமாதா பேராலயத்தில்”புதுமை இரவு"வழிபாடு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

பூண்டிமாதா பேராலயத்தில்”புதுமை இரவு"வழிபாடு.

 

IMG-20250405-WA0593

பூண்டிமாதா பேராலயத்தில்”புதுமை இரவு"வழிபாடு. 


தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை  இரவு நடைபெற்றது. பூண்டி அன்னையின் பக்தர்கள் நோயிலிருந்து சுகம்பெறவும், மன பாரத்திலிருந்து விடுதலைபெறவும், குடும்பத்தில் சமாதானம் நிலவவும், பக்தர்களின் தனிபட்டவேண்டுதல்கள் நிறைவேறவும்"பூண்டிமாதா புதுமை இரவு"சிறப்பு வழிபாடு பிரதி மாதம் முதல் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் உள்ளுர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து கலந்துகொண்டு பயனடைந்தும் வருகின்றனர். இம்மாதம் முதல் சனிக்கிழமை இரவு கப்புச்சின் சபை  அருள்பணி. சுந்தர் வழிகாட்டலில்  புதுமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி நடைபெற்றது. 7.00 மணிக்கு  எரியும் மெழுகுத்திரியுடன் சிறப்பு செபமாலை தேர்பவனி நடைபெற்றது. பின்னர்  சிறப்பு நற்கருணை ஆராதனையும், இரவு 9.00 மணிக்கு குணமளிக்கும் நற்செய்தி செப வழிபாடும், 11.30 மணிக்கு இறுதி ஆசீரும்  நடைபெற்றன. இதில் பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன் அந்தோணிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குனர் எஸ்.ஆல்பர்ட்சேவியர், உதவித் தந்தைகள் எஸ்.ஜான்கொர்னேலியுஸ், எஸ்.ஜெ.செபாஸ்டின், ஆன்மீக தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோஸப் மற்றும் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.  


தமிழககுரல் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா செய்தியாளர்.ஜே.ஜேசுராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad