ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் வேலூர் தலைமை தபால் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் வேலூர் தலைமை தபால் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்!

ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் வேலூர் தலைமை தபால் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஏப் 03 -

பிரதமருக்கு கோரிக்கை கடிதம்

வேலூர் மாவட்டம் ஓய்வூதியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவை திரும்ப பெற கோரி வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே ஓய்வூதியர் அமைப்புகளின் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் 03.04.2025 காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 25.03.2025 அன்று நிதி மசோதாவுடன் இணைந்து ஓய்வூதியர் உரிமைகளைப் பறிக்கும் மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.  நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா மூலம் அரசு 17.12.1982ல் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தலைமை யிலான அரசு சாசன அமர்வின் தீர்ப்பை மறுதளிப்பதே அரசின் நோக்கம்.  8வது ஊதியக்குழுவை அமைப்பதற்காக அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பது அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கு எதிரான ஊதியக்குழு அமைவதற்கு முன்னரே ஊதியக்குழுவின் செயல்பாடுகளை திட்டமிட்டு ஓய்வூதியர்களுக்கு எதிராகத் திருப்பிடவிடப்பட வேண்டும் என்ற அரசின் சதி நோக்கம்  தற்போது வெளிவந்துள்ளது.  இன்று மத்திய அரசின் ஓய்வூதியர்களுக்கு என்ன நடக்குமோ அததேதான் மாநில அரசு சார்ந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் நிகழும் எனவே அனைத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் சார்பில் இன்று வேலூர் தலைமை தபால் தந்தி அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட தலைவர் எ.கதிர்அகமது தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் சி.தங்கவேலு வரவேற்று பேசினார்.  
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த் தனன், கூட்டமைப்பின் செயலாளர் பி.லோகநாதன், நகர தொழிற்சங்க கூட்டப்பின் தலைவர் சி.ஞானசேகரன், மத்திய மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம், அகில இந்திய தபால் தந்தி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஜி.நரசிம்மன், ரயில்வே ஒய்வூதியர் சங்க டி.பிரபாசந்திரன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எ.பெருமாள், மற்றும் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம், மின்வாரிய ஓய்வூதியர் சங்கம், ஆயுள் காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்கங்களை சார்ந்த நிர்வாககிள் பங்கேற்று வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 25 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.பிரதமருக்கு கோரிக்கை கடிதம் ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் 25.03.2025 அன்று நிதி மசோதாவுடன் இணைந்து ஓய்வூதியர் உரிமைகளைப் பறிக்கும் மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளதை திரும்பப்பெற வலியுறுத்தி மாண்புமிகு.பாரத பிரமதருக்கு முகவரியிட்ட கோரிக்கை மனு வேலூர் தலைமை தபால் தந்தி துறையின் கண்காணிப்பாளர் நா.ராஜகோபாலன் அவர்களிடம் அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad