வேலூரில் உள்ளமேல்மொணவூர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்ற சர்வதேச சான்றுகள்!
வேலூர் , ஏப் 23 -
வேலூர் மாவட்டம் மேல்மொனவூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் அமெரிக்காவில் இயங்கி வரும் குளோபல் அகாடமி எக்செலன்ஸ் இணைந்து அபாகஸ் மற்றும் ஸ்பெல்பி பயிற்சி பெற்ற 49 தொடக்கப்பள்ளி மாணவர்கள் இன்டர்நேஷனல் தேர்வு எழுதினர்.
ஆசிரியர் சிலம்பரசி மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளித்தார். தேர்வில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக