திருப்பாச்சேத்தியில் வேலையை விட்டு நிறுத்தியதால் ஊராட்சி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கணினி ஆபரேட்டர், போலீசார் வழக்கு பதிவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

திருப்பாச்சேத்தியில் வேலையை விட்டு நிறுத்தியதால் ஊராட்சி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கணினி ஆபரேட்டர், போலீசார் வழக்கு பதிவு.

 

IMG-20250411-WA0255

திருப்பாச்சேத்தியில் வேலையை விட்டு நிறுத்தியதால் ஊராட்சி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கணினி ஆபரேட்டர், போலீசார் வழக்கு பதிவு. 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்தி பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் முத்து மகன் தவமணி (46). தவமணியின் பணி னபுரியும் ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் காமராஜர் காலணியை சேர்ந்த கருப்பன் மகன் ராமு (57). தவமணி ராமுவை வேலையை விட்டு நிறுத்தியதால், தவமணி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ராமு மற்றும் காமராஜர் காலணியைச் சேர்ந்த இளையராஜா மனைவி விஜயா (36) ஆகிய இருவரும் தவமணியை அசிங்கமாக பேசி, 'நீ எப்படி என்னை அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று சொல்வாய்' என்று கூறி தாக்கியதில் தவமணி கையில் காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் விடுத்த இருவரையும் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad