சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் ஐம்பெரும் விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் ஐம்பெரும் விழா

IMG-20250405-WA0338

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் ஐம்பெரும் விழாவில் நான்காம் நாள் நிகழ்வாக கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து தன் வரவேற்புரையில் அழகப்பா அரசு கலை கல்லூரியில்2023- 2024 ஆம் கல்வியாண்டில் பட்டம் பெற தகுதி உடையோர் என அழகப்பா பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்ட இளநிலை மாணவர்கள் 950 மற்றும் முதுநிலை மாணவர் மாணாக்கர்கள் 200 மொத்தம் 1150 மாணவர்கள் பட்டம் பெற தகுதி உடையோர் என தெரிவித்தார்.  மேலும் அவற்றில் 55 மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் தரம் பெற்றவர்கள் என்றும் கூறினார். பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் அழகப்பா செட்டியார் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மற்றும் செயலாளரான மதிப்புறு முனைவர் இராமநாதன் வைரவன் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வள்ளல் அழகப்பர் இக்கல்லூரியை உருவாக்குவதற்காக தன் வீட்டையும் வழங்கி வள்ளல் அழகப்பர் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்தார். இன்றளவும் வள்ளல் அழகப்பரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு அவர் செய்த அளப்பரிய தியாகம் தான் காரணம். அவரின் வழியில் இக் காரைக்குடி மண்ணில் ஒரு மருத்துவ கல்லூரியை துவக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் சவால்கள் வரும்பொழுது தான் மாணவர்கள் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று கூறி பட்டம் பெற்ற அனைவரும் தங்கள் வாழ்வில் மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார். இப்பட்டமளிப்பு விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad