தவறான சிகிச்சையால் ஆறு மாதம் கை குழந்தை உயிர் இழப்பு ! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 12 ஏப்ரல், 2025

தவறான சிகிச்சையால் ஆறு மாதம் கை குழந்தை உயிர் இழப்பு !

தவறான சிகிச்சையால் ஆறு மாதம் கை குழந்தை உயிர் இழப்பு !

குடியாத்தம் ,ஏப் 12 -

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் பகுதியை சேர்ந்த கார்த்தி ஜெயந்தி   வயது 26 தம்பதியருக்கு 
பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆறு மாதமான கை குழந்ததை. மனோஜ். க்கு காய்ச்சல் மற்றும்.  வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அரசு மருத்துவர்  இடம் குழந்தை எடுத்து சென்று உள்ளார்கள் பிறகு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது அப்போது ஆறு மாத கை குழந்தை மனோஜிக்கு  குளுக்கோஸ் போடுவதற்காக  உடம்பில் பல இடங் களில்  ஊசி போட்டு உள்ளார்கள். இதில் கைக்குழந்தை உயிரிழந்து  இதனால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் கதறி அழுதனர்
குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குழந்தையின் தாயார் குற்றச்சாட்டு தகவல் அறிந்த உடன் 
குடியாத்தம் துணை காவல் கண்காணிப் பாளர் ராமச்சந்திரன் தலைமையில் 
நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி உயிரிழந்த மனோஜின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர் இதனால் இரவு ஒரு மணி வரை அரசு மருத்துவமனையை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad