ஆழ்வார் தோப்பு - வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

ஆழ்வார் தோப்பு - வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

புதிதாக போடப்பட்ட தொழில் வழி சாலையில் பைப்லைன் உடைந்து 3 மாதங்களாக குடிநீர் வீணாக செல்கிறது.

ஆழ்வார் திருநகரியில் இரந்து கருங்குளம் வரை
புதிதாக தொழில் வழி சாலை அமைக்கப்பட்டு தற்போது கனரக வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் அவ்வழியாக சென்று வருகிறது.

ஆழ்வார் திருநகரி, ஆழ்வார் தோப்பு அருகே உள்ள தொழில் வழி சாலையில் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மூன்று மாதங்களாக தண்ணீர் வீணாகி, சாலையில் பழுது ஏற்பட்டுள்ளது.

எனவே சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் போய் சரி செய்து, மேலும் சாலை பழுதடையாமல் பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad