தேசிய திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

தேசிய திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம்.

தேசிய திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம், தமிழக அளவில் சிறப்பிடம்.

தேசிய திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடத்தையும், தமிழக அளவில் சிறப்பிடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில்,எட்டாம் வகுப்பு மாணவர் ஆகாஷ் ஆழ்வார் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடமும், தமிழக அளவில் ஐந்தாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆல்பி ஜோன்ஸ், காட்சன் ஜீடா, பிரதீப் ராஜ், சித்தார்த் மற்றும் கார்த்திக் சிவராஜா ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ருபாய் 12ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை வழங்கப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், ஆசிரியைகள் அமுதா வில்சி தங்கம், சோபியா பொன்ஸ் ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டினர். 

ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தேர்ச்சி பெற்ற மாணவர்களையும்,பயிற்றுவித்த ஆசிரியர்களையும், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad