திமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஆலங்குளம், ஏப்.9: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து,
ஆலங்குளத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம், ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் செல்லாது என அறிவித்தது உச்சநீதிமன்றம். மேலும், அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதலும் அளித்தது உச்சநீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பை வரவேற்று, ஆலங்குளம், நகர, ஒன்றிய திமுக சார்பில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி.டி.நெல்சன் தலைமை வகித்தார்.
ஒன்றியச் செயலாளர் மு.செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் கே.சமுத்திரப்பாண்டியன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரப் பொருளாளர் எஸ்.சுதந்திரராஜன் வரவேற்றார்.
நிறைவில், தமிழக ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில், தொழிலதிபர் கணேஷ்பாண்டியன், மாவட்டப் பிரதிநிதி வாசு, ராமகிருஷ்ணன், சீனிப்பாண்டி, சிறுபான்மைப் பிரிவு முகம்மது மைதீன், கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக