தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குதிரை மொழி கிராமம் தேரி குடியிருப்பில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை மாவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், அருள்மிகு பேச்சியம்மன் உற்சவர் ஊஞ்சல் சேவை, காலை 9.30 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வருதல், 11 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 11:30 மணிக்கு சுவாமி கருப்புவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வில்லிசை நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் காந்திமதி, அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்ரமணியம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குமார், முருகப்பெருமாள், பிரபா, முத்துக்குமார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்..
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக