தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.
தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை ஒவ்வொரு ஆண்டும் 8ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் வழி தேர்வு (NMMS)நடைபெறுகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான இந்தத் தேர்வு கடந்த பிப்ரவரி 2025மாதம் நடைபெற்றது .அந்த தேர்வில் கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர் .தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி சார்ந்த 9 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் கோவை மாவட்டத்திலேயே அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலே அதிக அளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது இம்மானவர்களுக்கு மாதம்தோறும் 1000வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும் இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளையும் மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி உள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக