குழந்தை இல்லாதவர்களுக்கு சாமி பரிகாரம் செய்வது போல் தங்க நகை பறித்த தாய் மகன் கைது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

குழந்தை இல்லாதவர்களுக்கு சாமி பரிகாரம் செய்வது போல் தங்க நகை பறித்த தாய் மகன் கைது!

குழந்தை இல்லாதவர்களுக்கு சாமி பரிகாரம் செய்வது போல் தங்க நகை பறித்து தாய் மகன்  கைது!

விழுப்புரம், ஏப் 26 -

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டத்தூரில் கடந்த 22 ஆம் தேதி குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி ஐந்து பவுன் தங்க தாலி சரடு ஏமாற்றி எடுத்துச் சென்ற வழக்கு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை கண் காணிப்பாளர் நந்தகுமார் மேற்பார்வை யில் காவல் ஆய்வாளர் மூர்த்தி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை CCTV களை ஆராய்ந்து விசாரணை செய்ததில் வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 46) என்பவர் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை தெரிந்து கொண்டு தனது மகன் வல்லரசு (வயது 22) என்பவரிடம் தகவல் தெரிவித் துள்ளார்  மறுநாள் வல்லரசு அந்த வீட்டிற்கு சென்று சாமிக்கு பரிகாரம் செய்வது போல் நாடகமாடி ஐந்து பவுன் தாலி சரடு கழற்றி வாங்கி ஏமாற்றி தப்பி சென்றது தெரியவந்தது.மேலும் தாய் மகன் இருவரையும் பிடித்து காவல் துறை விசாரணை செய்து வருகின்றனர். 

தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad