திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அளவிலான...... பாரதிய ஜனதா கட்சி தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கைக்கான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற அளவிலான தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் குலசேகரன் பட்டினத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் தலைமை வைத்தார். மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஸ்டீபன் லோபோ, ஓ பி சி பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பாண்டியன், ஆழ்வை கவுன்சிலர் குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில் உடன்குடி ஒன்றிய தலைவர் சங்கர குமார், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் பேச்சித்துரை, திருச்செந்தூர் நகர தலைவர் செல்வகுமரன், முன்னாள் திருச்செந்தூர் பாஜக நகர தலைவர் நவமணிகண்டன், ஆறுமுகநேரி நகர தலைவர் தங்க கண்ணன் ,ஆழ்வை கிழக்கு மண்டல தலைவர் சிவஜோதி பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் s. திருநாகரன், மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணிராஜா திருச்செந்தூர் தாலூகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக