வாணியம்பாடி , ஏப்ரல் 02 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கி வரும் இலவச நாப்கின் களை அவர்களுக்கு வழங்காமல் வீணாக்கி வருவதாக குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன.மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற இலவச நாப்கின்களை பள்ளி நிர்வாகம் வழங்கா மல் கேட்பாரற்று வீசப்பட்டுள்ளது. நாப்கின்கள் பள்ளியின் மைதானம் முழுவதும் சிதறியும், சில நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. 4 மூட்டைகளில் உள்ள சுமார் 3840 நாப்கின்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலமாகவே மாணவிகளுக்கு வழங்கப் படும் நாப்கின்கள் அழிக்கப்பட்டுள்ள தாகத் கூறப்படுகிறது. சுமார் 300 ஏழை மாணவிகளுக்கு வழங்க வேண்டிய நாப்கின்கள் இவ்வாறு வீண்போவதை எண்ணி மாணவிகளும் பெற்றோர்களும் வேதனை அடைந்துள்ளனர். எனவே பள்ளிக் கல்வித் துறையினர் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத் தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கக்கூடிய நாப்கின்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இது குறித்து மாவட்ட முழுவதும் அரசு பள்ளியில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக