கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கும்போது, அவர்களின் தகவல்களை பதிய புதிய மொபைல் ஆப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அண்மையில், “City Visitor Information Record Managing System (CVIRMS)” என்ற புதிய மொபைல் ஆப்பை கன்னியாகுமரி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
தினமும் 5,000 முதல் 10,000 வரை சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். இவர்களின் அடையாளங்களை பதிவு செய்யும் முறை, தற்போது கையெழுத்து பதிவு புத்தகங்களில் மட்டுமே நடைபெறுகிறது.
பயணிகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பாக. போலீசாரிடம் இருக்க வேண்டும் என்பதால், இந்த புதிய மொபைல் ஆப் அமல்படுத்தப்படுகிறது.
கன்னியாகுமரியில் உள்ள 100க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்கள் இந்த புதிய ஆப்பை உடனடியாக நிறுவ வேண்டும் என கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி நிறுவன பொறியாளர்கள் விக்னேஷ், பிரேம் குமார் ஆகியோர் புதிய ஆப்பை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர். பெயர், ஆதார் எண், மொபைல் எண், புகைப்படம், வாகன எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்ய வேண்டும்.
18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்கக் கூடாது.லாட்ஜ், ஹோட்டல்களில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு கொள்ள “#Police Help” QR Code-ஐ பொது பகுதிகளில் ஒட்ட வேண்டும். சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனவே எல்லா ஹோட்டல்கள், லாட்ஜ்கள் உடனடியாக இந்த ஆப்பை பயன்படுத்த வேண்டும்” என டிஎஸ்பி மகேஷ்குமார் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் முத்து, லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குணசீலன் கோமஸ், செயலாளர் கென்னடி, பொருளாளர் பொன்ராஜ், துணைத் தலைவர்கள் தாமஸ், சந்திரன், துணைச் செயலாளர் அந்தோணி ஜோசப், அல்போன்ஸ், மற்றும் 50க்கும் மேற்பட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன் ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக